எமது சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற QR Scan திட்டத்தினூடாக தாங்கள் கட்டணங்கள்; செலுத்துவதற்கான சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் சபைக்கு நேரடியாக வருகை தராமல் தங்கள் கையடக்க தொலைபேசி மூலம் கொடுப்பனவு மேற்கொள்வதற்கான புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். குறித்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான செயன்முறைகள் பின்வருமாறு:
1. கட்டணம் செலுத்த வேண்டிய சேவைக்கான சரியான தொகையை அறிந்துகொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசியில் Smart Pay App இனை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
3. அதற்கான தங்களது வங்கிக் கணக்கு தொடர்பான மேலதிக தகவல்களை குறித்த App இல் உள்ளடக்கவும்.
4. '“QR Scan”' எனும் தெரிவை தெரிவு செய்து எமது இணையத்தள முகப்பு பக்கத்தில் காணப்படுகின்ற QR Scan செய்து தங்களது கொடுப்பனவுத்தொகையை செலுத்த முடியும்.
5. செலுத்திய பின்னர் தங்களிற்குக் கிடைக்கப்பெறும் பற்றுச்சீட்டை தரவிறக்கம் செய்து பற்றுச்சீட்டையும், கட்டணம் செலுத்தப்பட்டமைக்கான நோக்கத்தினையயும் 070 222 2700 எனும் சபையின் Whats up இலக்கத்துக்கு அனுப்பிவைப்பதுடன், தங்களுக்கான சேவை விநியோக சேவையாக அமையுமிடத்து விநியோகக் கட்டணத்துடன் அச்சேவைகள் மேற்கொள்ளப்படும்.
எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல் கடந்த 2023.06.02 ஆம் திகதி எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நகரசபைகளின் கணக்காளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சித்திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் எமது சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த மென்பொருட்களின் பயன்பாடு மற்றும் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய சபைகளிற்கும் இம்மென்பொருட்களின் பாவனைனை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சபைநிதி மூலம் சபை எல்லைக்குள் வதியும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களிற்கு தையல் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள்,தொழில்முயற்சிக்கான இயந்திர உபகரணங்கள், சமையற்பாத்திரங்கள், கோழிக்குஞ்சுகளுடன் கோழிக்கூடு என்பன வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2023.05.18ஆந் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் அதனது பதிவுகள்..
நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 2022 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் அறிதலுக்காக வரவுசெலவுத்திட்டத்தின் பொழிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.
சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது கோரிக்கைகளை இலகு முறையில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகிள் படிவத்தில் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியுமென்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
https://docs.google.com/forms/d/1WSf0E53fUWSTH6AIUlt36kS4uNgJihJ-_yeF4UrjYT8/edit