வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தலும் நூலகங்களின் நூலக அங்கத்தவர்களை அதிகரித்தலும்

நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஔவையாரின் வரிகள் இந்த உலகில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு நூல்களை வாசிக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் அறிவினை பெற்றுக்கொள்கிறான் என கூறுகின்றது. வாசிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்துவதோடு, சிறந்த அறிவுத்திறனையும், நுண்ணறிவினையும் வழங்குகிறது.

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல நண்பனுக்கு ஒப்பானது. எனவே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடனும் சபையினால் நூலக அங்கத்தவர்களை அதிகரிக்கும் நோக்கிலும் மக்களிற்கான நூலக அங்கத்துவம் தொடர்பில் பின்வரும் விதிமுறைகள் இலகுபடுத்தப்பபடுகின்றது.

  1. நூலக அங்கத்துவப் படிவத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். (https://www.nallur.ps.gov.lk/wp-content/uploads/2024/04/101.pdf எனும் லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்)
  2. நூலக அங்கத்துவக் கட்டணமின்றி அங்கத்துவம் பெற்றுக்கொள்ளலாம்
  3. பாடசாலை மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபரின் கையொப்பத்துடன் விண்ணப்பங்களை வழங்கி நூலகத்தில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கமைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கேதுவாக தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடும்ப பதிவு அட்டையின் பிரதியை உறுதிப்படுத்தி நூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  4. பாடசாலை மாணவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடும்ப பதிவு அட்டையின் பிரதியை உறுதிப்படுத்தி நுலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

இதற்கமைய வாசிப்பு எப்போதும் மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதனை உணர்ந்து, அனைவரையும் நூலகத்தில் இணைத்து வாசிப்பை ஊக்குவிக்க முயலுவோம்.

UNDPஇன் Resident Representative Azusa Kubotaஇன் விஜயம்

UNDPஇன் Resident Representative Azusa Kubota கடந்த 14ம் திகதி சபைக்கு விஜயம் செய்து சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட UNDP திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் சபையின் வினைத்திறனான நவீன தொழிநுட்பத்துடனான சேவை வழங்கல் தொடர்பில் தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளமை பெருமைக்குரியது.

 

இலத்திரனியல் முறையிலான வருமான அறவீடு

எமது சபையினால் நாளாந்தம் வருமான அறவீடுகள் மேற்கொள்ளப்படும் போது விரைவாகவும் பொதுமக்கள் இலகுவான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத்தக்கவாறு மாற்றியமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக வங்கி அட்டைக்கான பணப்பரிமாற்றம் மற்றும் QR முறை மூலமான பண பரிமாற்றம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தமது கொடுப்பனவுகளை இலகுவான முறையில் மேற்கொள்ள முடிவதுடன், சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற நடமாடும் சேவை வழங்கலின் போதும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலை இலகுபடுத்த முடிகின்றது.