Category: நிழற்படங்கள்
வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் வழங்கல்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான “அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல்” என்ற இலக்கை அடையும் நோக்கில் சபை ஆளுகையினுள் வதியும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலரின் சிபார்சிற்கமைய வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு ரூபா 621,626.40 பெறுமதியான தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் அடங்கிய பொதிகள் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டன. குறித்த பொதிகளை கர்ப்பிணித்தாய்மார்கள் சிரமமின்றி இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை உத்தியோகத்தர்களினால் கர்ப்பிணித் தாய்மார்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் 2024
எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வூட்டும் காணொளி இதுவாகும். பொதுமக்களின் உரிமையும் கடமையுமான வாக்களித்தலை சரியான முறையில் மேற்கொள்வதற்கு இக்காணொளி உறுதுணையாக அமையும்.
காணொளியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும் - https://www.facebook.com/61556532111908/videos/1309923283370589
கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சியும் நூல்களின் கண்காட்சியும்
வாசிப்பதனாலும் எழுதுவதனாலும் மாணவர்கள் வல்லதோர் உலகில் வெற்றிவாகை சூடி வியத்தகு படைப்பாளிகளாகவும் நயத்தகு தலைவர்களாகவும் மிளிர்கிறார்கள். உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே! இத்தகு தாற்பரியத்தை உணர்த்தும் கண்காட்சியே இதுவாகும். இக் கண்காட்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. கே.எஸ்.சிவஞானராஜா அவர்களின் கையெழுத்துப்பிரதிகளின் கண்காட்சியும் திரு ச.சஜீவன் அவர்களின் சிறுவர் நூல்தொகுப்புகளின் கண்காட்சியும் இடம்பெறும்.
இடம் : கொக்குவில் பொது நூலக மண்டபம்
காலம் : 24.10.2024, 25.10.2024 (வியாழன்,வெள்ளிக்கிழமைகள்)
நேரம் : காலை 9.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு
”உலகை வென்றவா்கள் வாசித்த மக்களே“ எனும் தொனிப்பொருளிற்கு அமைய நல்லூா் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கொக்குவில், கோண்டாவில், நல்லூா் நூலகங்களின் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு 20.10.2024 அன்று இனிதே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணா் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபா் திரு.பெ.வசந்தன் ஆகியோரிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள். மற்றும் பரிசில்களைப் பெற்ற மாணவா்களிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, வரவேற்பு நடனத்தை வழங்கிய யா.கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவிகளிற்கும் பட்டிமன்றத்தை வழங்கிய திரு.எஸ்பீரியா் ஜனாா்த் குழுவினரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 6ம் வார நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 2ம் நாள்
தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 1ம் நாள்
சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான ”அனைவரும் உள்ளடங்கிய சமத்துவமான கல்வியையும் வாழ்நாளுக்கான கற்றல் சந்தர்ப்பத்தினையும் உறுதி செய்தல்” என்பதனை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தில் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 18 முன்பள்ளிகளுக்கு ரூபா 1,575,180.00 பெறுமதியான விளையாட்டுப்போட்டிகளிற்கான Band Sets வழங்கப்பட்டன.



































































































