வீதியோர மரநடுகை நிகழ்ச்சி – 16.09.2025

மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பசுமைப்படுத்தும் நோக்கத்துடன், Green Layer அமைப்பினால் மரங்கள் அன்பளிப்பாக சபைக்கு வழங்கப்பட்டு, நல்லூர் பிரதேச சபையினால் மாணவர்களின் பங்கேற்புடன் வீதியோர மரநடுகை நிகழ்ச்சி 2025.09.16ம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் பங்கேற்புடன் வீதியோரத்தில் மரங்களை நாட்டி, பசுமையான சூழலை உருவாக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

வீதியோர மரநடுகை மூலம் வீதி அழகுபடுத்துவதோடு, தூய காற்று, நிழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு கிடைக்கப்பெறும் என்பதை மாணவர்கள் உணர்ந்தனர். இந்நிகழ்ச்சி சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மாணவர்கள் அளிக்கும் சிறந்த பங்களிப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையையும், மரங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் பெறுவர். எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான, ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்கான சிறந்த முன்னுதாரணமாக இந்நிகழ்ச்சி அமையும். பசுமை சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான சூழலை பரிசாக வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாகும்.

நடமாடும் சேவைக்கான பொது அறிவித்தல்

Screenshot 2025-09-17 105558

வாசிப்பு முகாம் – 11.09.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 11.09.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம்

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினூடாக நல்லூர் பிரதேச சபையினால் கீழ்க்காட்டப்பட்ட அட்டவணை அடிப்படையில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம் நடைபெறவிருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பெண்நாய்களுக்கு இச்செயற்றிட்டத்தில் இலவசமாக சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சமூக ஆர்வலர்கள் வீதியோரங்களில் நடமாடும் கட்டாக்காலி பெண்நாய்களிற்கான கருத்தடையை மேற்கொள்ள சபைக்கு உதவி நல்கமுடியும்.
தற்போது நாட்டில் நாய்களினால் ஏற்படும் உயிர் இழப்புக்கள், விபத்துக்கள் அதிகரித்துள்ளநிலையில் தொற்றுநோய்களினால் நாளுக்கு நாள் பல மரணங்களும் சம்பவிக்கின்றன. மேலும் நாய்களின் பெருக்கம் காரணமாக பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை கருத்திற்கொண்டு தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்கு உரிய சிகிச்சைகளைப்பெற்று ஆரோக்கியமாக வாழ ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dogs 08.09.2025_page-0001
Dogs 08.09.2025_page-0002

வாசிப்பு முகாம் – 31.07.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 31.07.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

வாசிப்பு முகாம் – 25.07.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 25.07.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

வாசிப்பு முகாம் – 03.07.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 03.07.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

வாசிப்பு முகாம் – 12.06.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு12.06.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

சுற்றாடல் தின நிகழ்வு – 05.06.2025

செம்மணி சந்தியிலிருந்து, யாழ் நோக்கி நல்லூர் பிரதேச சபையும், செம்மணி வீதி வழியாக வலி கிழக்கு பிரதேச சபையும், நாவற்குழி நோக்கி சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விசேட பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான சிரமதான நிகழ்வினை சபை உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் மேற்கொண்டனர்.

கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான பொது அறிவித்தல்

complaint assessment tax notice