Category: நிழற்படங்கள்
வாசிப்பு முகாம் – 21.02.2025
ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே ஆங்கில வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வாராவாரம் தொடா்ச்சியாக கொக்குவில் பொது நூலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வாசிப்பு முகாமொன்று யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. 28.02.2025 அன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் பதிவுகள்.இதில் வளவாளராக கலந்து மாணவா்களை ஊக்குவித்த ஆசிரிய பயிற்றுவிப்பாளா் திரு.சீவரட்ணம் சுரேஸ்குமாா் அவா்களிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள்.
Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் உதயபுரம் கடற்கரை கரையோரத்தில் துப்பரவுப்பணிகள்
Save a Life மற்றும் நல்லூர் பிரதேச சபையுடன் இணைந்து Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் உதயபுரம் கடற்கரை கரையோரத்தில் துப்பரவுப்பணிகள் 2025.02.15ம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
பொது அறிவித்தல் – தரம் பிரிக்கப்பட்ட உக்கக்கூடிய கழிவுகளை கையளித்தல்
புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி
தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 2024.11.25ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 01.01.2025ம் திகதியிலிருந்து பெறுகை நடைமுறைகள் புதிய பெறுகை நடைமறை வழிகாட்டி மற்றும் கையேட்டின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி நல்லூர் பிரதேச சபை உட்பட 08 உள்ளூராட்சி மன்ற சபை உத்தியோகத்தர்களிற்கு ஓய்வுநிலை வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள் எந்திரி.எஸ்.சண்முகாநந்தன் அவர்களால் 22.01.2025, 06.02.2025 மற்றும் 07.02.2025ம் திகதிகளில் சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் Plastic Zero Challenge
2025ம் ஆண்டின் புதுப்பொலிவுடன் 22/2024 பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2025.01.01ம் திகதி ”கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக சபையின் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது.
உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) நிறைவு விழா
CA Sri Lanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டி
நல்லூர் பிரதேச சபையானது CA Srilanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தது . குறித்த போட்டியின் விருது வழங்கும் நிகழ்வு 2024.12.02ஆந் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் B கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த விருது வழங்கும் நிகழ்வில் எமது சபைக்கான இணக்கப்பாட்டிற்கான சான்றிதழை (Certificate of Compliance) சபை சார்பில் சபையின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.
உள்ளூர் அதிகாரசபைக்கான அபிவிருத்தித்திட்டம்
2185/74ம் இலக்க 2023.07.24ம் திகதிய வர்த்தமானி பிரசுரிப்பின் மூலம் 1978ம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்ட இல 41ன் கீழ் நல்லூர் பிரதேச சபையானது நகர அபிவிருத்தி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கான அபிவிருத்தித் திட்டம் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சபையின் தலைமை காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் என்பவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், சபையின் இணையத்தளத்திலும் (www.nallur.ps.gov.lk) முகநூல் பக்கத்திலும் (https://www.facebook.com/NallurPradeshiyaSabhaa) மென்பிரதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மற்றும் சபை அபிவிருத்தியில் அக்கறையுள்ள தரப்பினர் மேற்படி திட்டத்தினை பார்வையிட்டு அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களினை எதிர்வரும் 2025.01.21ம் திகதிக்கு முன்னராக எழுத்துமூலம் சபையின் தலைமை அலுவலகத்திலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ (npsnallur@gmail.com) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இது சபை ஆளுகைப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயம் என்பதனால் அதிக முன்னுரிமை வழங்கி தங்களால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் தெளிவான விபரங்களையும் தங்களுடைய தொடர்பு விபரங்களையும் இணைத்து அனுப்பி வைப்பது பயனுறுதியாக அமையும் எனக்கருதுகின்றேன்.







































