விடுதிகளைப் பதிவு செய்தல்
நல்லூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரைபு வரவுசெலவுத்திட்டம் '1987 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டத்தின் 15 ஆம் இலக்க 168 ஆம் பிரிவிற்கமைய' தயாரிக்கப்பட்டு 05.12.2025 தொடக்கம் 11.12.2025ஆம் திகதி வரை எமது தலைமை அலுவலகம், உப அலுவலகங்கள், பொது நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், இதனை அலுவலக நேரங்களில் பார்வையிடலாம்.
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக யா/கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்களுக்கான கட்டுரை ஆக்க நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களின்:
'எழுத்தில் வெளிப்படும் சிந்தனை – சமூக முன்னேற்றத்தின் அஸ்திவாரம்'
யா.கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் உள்ளுராட்சி வார நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கான கோலம் போடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவிகளின் கலைப்பண்புகள், அழகுணர்வு, பொறுமை மற்றும், ஒருமைப்பாடு, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் மேம்படுத்தப்பட்டன.
'கோலத்தில் கலை – கலாச்சாரத்தில் ஒளி'
யாழ் கொக்குவில் சரஸ்வதி முன்பள்ளியில் உள்ளுராட்சி வார நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, சிறுவர்களுக்கான வா்ணம் தீட்டுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் சிறுவர்களின்:
“குழந்தைகள் கற்பனையில் வண்ணம் தீட்டும் போது – நாளைய சமூகம் அழகாக மலர்கிறது”
மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பசுமைப்படுத்தும் நோக்கத்துடன், Green Layer அமைப்பினால் மரங்கள் அன்பளிப்பாக சபைக்கு வழங்கப்பட்டு, நல்லூர் பிரதேச சபையினால் மாணவர்களின் பங்கேற்புடன் வீதியோர மரநடுகை நிகழ்ச்சி 2025.09.16ம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் பங்கேற்புடன் வீதியோரத்தில் மரங்களை நாட்டி, பசுமையான சூழலை உருவாக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
வீதியோர மரநடுகை மூலம் வீதி அழகுபடுத்துவதோடு, தூய காற்று, நிழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு கிடைக்கப்பெறும் என்பதை மாணவர்கள் உணர்ந்தனர். இந்நிகழ்ச்சி சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மாணவர்கள் அளிக்கும் சிறந்த பங்களிப்பாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையையும், மரங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் பெறுவர். எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான, ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்கான சிறந்த முன்னுதாரணமாக இந்நிகழ்ச்சி அமையும். பசுமை சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான சூழலை பரிசாக வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாகும்.