மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பசுமைப்படுத்தும் நோக்கத்துடன், Green Layer அமைப்பினால் மரங்கள் அன்பளிப்பாக சபைக்கு வழங்கப்பட்டு, நல்லூர் பிரதேச சபையினால் மாணவர்களின் பங்கேற்புடன் வீதியோர மரநடுகை நிகழ்ச்சி 2025.09.16ம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் பங்கேற்புடன் வீதியோரத்தில் மரங்களை நாட்டி, பசுமையான சூழலை உருவாக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
வீதியோர மரநடுகை மூலம் வீதி அழகுபடுத்துவதோடு, தூய காற்று, நிழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு கிடைக்கப்பெறும் என்பதை மாணவர்கள் உணர்ந்தனர். இந்நிகழ்ச்சி சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மாணவர்கள் அளிக்கும் சிறந்த பங்களிப்பாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையையும், மரங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் பெறுவர். எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான, ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்கான சிறந்த முன்னுதாரணமாக இந்நிகழ்ச்சி அமையும். பசுமை சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான சூழலை பரிசாக வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாகும்.
















