வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினூடாக நல்லூர் பிரதேச சபையினால் கீழ்க்காட்டப்பட்ட அட்டவணை அடிப்படையில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம் நடைபெறவிருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பெண்நாய்களுக்கு இச்செயற்றிட்டத்தில் இலவசமாக சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சமூக ஆர்வலர்கள் வீதியோரங்களில் நடமாடும் கட்டாக்காலி பெண்நாய்களிற்கான கருத்தடையை மேற்கொள்ள சபைக்கு உதவி நல்கமுடியும்.
தற்போது நாட்டில் நாய்களினால் ஏற்படும் உயிர் இழப்புக்கள், விபத்துக்கள் அதிகரித்துள்ளநிலையில் தொற்றுநோய்களினால் நாளுக்கு நாள் பல மரணங்களும் சம்பவிக்கின்றன. மேலும் நாய்களின் பெருக்கம் காரணமாக பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை கருத்திற்கொண்டு தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்கு உரிய சிகிச்சைகளைப்பெற்று ஆரோக்கியமாக வாழ ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

